நெடுந்தீவு கடலில் இந்திய படகு மூழ்கடிப்பு - கடற்படைப் படகும் சேதம்!
19 Jan,2021
நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
50க்கும் மேற்பட்ட இந்திய ட்ரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படகுகளை கைப்பற்ற முயன்ற வேளை அதிலிருந்து தப்ப முயன்ற படகொன்று இலங்கை கடற்படையின் படகுடன் மோதி கடலில் மூழ்கியது என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட படகில் எத்தனை மீனவர்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கலமொன்று சேதமடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இந்திய கடற்படையினருக்கு அறிவித்துள்ளதுடன் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கிய இந்திய படகினை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்றிரவு ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.