சிகை அலங்கார நிலையத்தில் 6பெண் உட்பட மயக்கத்தில்!
16 Jan,2021
facebook sharing button Sharesharethis sharing button Sharelinkedin sharing button Sharewhatsapp sharing button Sharetwitter sharing button Tweet
கம்பகா மாவட்டத்தில் உள்ள மீரிகமை பிரதேசத்தில் சிகை அலங்காரம் செய்யும் இடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரு மணப்பெண்கள் உட்பட 6 பேர் மயக்க நிலையில் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் காரணமாக, எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று தகவல் அறியக் கிடைத்தது.
இவ்வாறு, சிகை அழகு நிலையத்தின் உரிமையாளர், மூன்று ஊழியர்கள் மற்றும் இரு மணப்பெண்கள் அனைவருமே இவ்வாறு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் ,நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டி (AC) இயந்திரத்தின் மூலம் வெளியேறிய நச்சு வாயுவினை குறித்த நபர்கள் சுவாசித்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா அச்ச சூழ்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் மேலும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.