மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன !
09 Jan,2021
கிரியுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்னல – மும்மான கிராம சேவகர் பிரிவு மற்றும் வேத்தேவ கிராம சேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கொட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் குறித்த இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.