பாணமை காட்டுப்பகுதியில் குழப்பநிலை – ஐவர் கைது!
03 Jan,2021
பொத்துவில் பாணமை காட்டுப்பகுதியில் குழப்பநிலையொன்று ஏற்பட்டதை தொடர்ந்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள காட்டுப் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்தே அங்கு பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பாணமையில் உள்ள வனவிலங்கு காரியாலயத்திற்குள் நுழைந்த சிலர் அலுவலகத்தினை சேதப்படுத்தியதன் விளைவாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் முச்சக்கர வண்டிகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து தொடர் விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.