இலங்கை சிறைச்சாலைகளில் 4 ஆயிரத்து 87 பேருக்கு கொரோனா தொற்று
02 Jan,2021
சிறைச்சாலையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 71 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 347 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதுடன் மேலும் 731 பேர் சிகிச்சை பெற்று வநாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 167ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 562 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 36 ஆயிரத்து 717 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும், ஏழாயிரத்து 242 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.ருகின்றனர்.