பரவட்டும் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்த கோட்டபாய
24 Dec,2020
:
புலிகள் தொடர்பாக பேசி பேசியே, சிங்கள மக்களை உசுப்பேத்தி வாக்குகளை வாங்கி ஜனாதிபதி ஆகிவிட்டார் கோட்டபாய. ஆனால் கொரோனா தொற்று என்று வந்த வேளையும் சரி. மக்கள் இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரமானாலும் சரி. இலங்கை அரசு இந்த 2 விடையங்களிலும் சிங்களவர்களை கை விட்டது. தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் இதனை நன்றாக உணர்ந்தவர்கள். இப்படி தான் நடக்கும் என்று தெரிந்தே, எதுவும் பேசவில்லை.
ஆனால் கொரோனா பிரச்சனையை இலங்கை அரசு கையாளும் விதம், சிங்கள மக்களிடையே. அதுவும் சாமானிய சிங்கள மக்கள் இடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி ஒன்றும் செய்ய முடியாது. கட்டுக்கு அடங்காமல் கொரோனா சென்று விட்டது. வருவது வரட்டும் என்ற தொணியில் கோட்டா உள்ளார். இதனால் முன்னர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட தற்போது எடுக்கப்படவில்லை. இதனால் சிங்களவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மாய்ந்து மாய்ந்து கோட்டாவுக்கு வாக்குகளை அள்ளிப் போட்ட நபர்கள் தற்போது ஏன் இப்படிச் செய்தோம் என்று சிந்திக்கும் அளவு இலங்கையில் நிலமை படு மோசமாக மாறியுள்ளது. சிங்களவர்கள் கொஞ்சம் ஏமாளிகள் என்றால், புலிகள் திட்டமிட்டு பரப்பிய நோய் தான் கொரோனா என்று கூறி, கோட்டபாய தப்பி இருப்பார். ஆனால் அப்படி சொல்லவும் முடியவில்லை. இப்படி ஒரு இக்கட்டான கால கட்டத்தில் அவர் சிக்கியுள்ளார். இதே நேரம் எதிர்கட்சிகள் இதனை சுட்டிக் காட்ட தவறவில்லை.