அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கோரிக்கை!
21 Dec,2020
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த தினங்களில் மது அருந்தி பயணத்தில் ஈடுபடுவார்கள் என்பதனால் கொரோனா தொற்று பரவும் அபாயத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.