ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் சமையற்கூட பணியாளர்களுக்கு கொரோனா!
17 Dec,2020
ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் சமையற்கூட செயற்பாட்டு பிரிவின் பணியாளர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் சமையற்கூட செயற்பாட்டு பிரிவின் பணியாளர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு 14ஆம் திகதி செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், அவருடன் பணிபுரிந்த ஏனைய 7 பணியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவர்களுடன் பணியாற்றிய ஏனைய அலுவலக சபையினருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.