சடலங்களை புதைக்க அனுமதி மறுப்பு!
16 Dec,2020
மஹர சிறை மோதலில் உயிரிழந்த நான்கு பேரின் சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று மஹர நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
மஹர சிறை மோதலில் உயிரிழந்த நான்கு பேரின் சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று மஹர நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மோதல் காரணமாக 11 கைதிகள் உயிரிழந்த நிலையில் அவர்களில் 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்து. அதன்படி, குறித்த நான்கு பேரும் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த சடலங்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.