இலங்கையில் கொரோனா பாதிப்பு 30,000ஐ கடந்தது!
09 Dec,2020
நாட்டில் இன்று மட்டும் 694 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இதுவரை 30 ஆயிரத்து 72 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் 651 பேர் பேலியகொட மீன் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய 43 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையின் மொத்த பாதிப்பு 26ஆயிரத்து 516ஆகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 542 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 21 ஆயிரத்து 800 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் எட்டாயிரத்து 128 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரை 142 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.