ஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை
24 Oct,2020
2030 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று நம்பிக்கை உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின் தனது செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்திற் கூறியுள்ளார்.
தேவைப்படும் போது அமைதி காக்கும் படைகளை அனுப்பி பங்களிப்பு செய்தமை மூலம் இலங்கைக்கு எப்போதும் ஐக்கிய நாடுகள் சபையை ஆதரவினை வழங்கியது என்றும் அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையின் சுகாதாரம், பொருளாதாரம் போன்றவற்றிற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சுனாமி மற்றும் போருக்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஐ.நா உதவியது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று, ஐ.நா போன்ற ஒரு அமைப்பின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது என சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த அமைப்பு இன்றி உலகம் செல்ல சரியான திசையில் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
தூய்மையான நீர் மற்றும் சுகாதார வசதிகள், பொருளாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை, கடல் வளங்கள் மற்றும் கடல் வாழ்க்கை, பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள், அமைதி, நீதி மற்றும் நியாயத்திற்கான ஒரு பொறிமுறையை நிறுவுதல், வறுமையை ஒழித்தல், தரமான கல்வி, பாலின சமத்துவம் மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு போன்ற விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பினையும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.