மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்
22 Sep,2020
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வழங்கி வைக்கப்பட்டது.
இவருடன், கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத்தும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது