ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகவுள்ளது இலங்கை!
18 Sep,2020
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45 ஆவது அமர்வில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாரில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
2009 முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை போலியான யுத்தக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது இலங்கையை காட்டுமிராண்டி தேசமாக காண்பிக்க முயல்கின்றது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சமீபத்தைய கருத்துக்கள் இலங்கைக்கு எதிரான கடந்த கால கருத்துக்களின் தொடர்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடாக நாங்கள் சரணடைந்தால் மனித உரிமை பேரவை தெரிவிக்கும் அனைத்தையும் ஏற்கவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ்பத்திரன, உயர்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனை மனித உரிமை பேரவைக்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.