இராணுவத்தினர் கைப்பற்றிய நிலங்கள் மீள வழங்கப்படாது!
11 Sep,2020
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள், மக்களுக்கு திருப்பி கையளிக்கப்படாது. இது தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைது என்று மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

தொல்பொருள் இடம் என்று கூறி விவசாயிகள் பயிரிடுவதைத் தடுப்பதற்கு ஒரு பௌத்த துறவி முயன்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பௌத்த பிக்குகள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்லர். அவர்களும் இந்த சமுதாயத்தின் ஒரு பகுதியாகவே உள்ளனர், அத்துடன் சிங்களப் பாரம்பரியத்தை பாதுகாக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு.
இராணுவம் வடக்கில் மதிப்புமிக்க நிலங்களை ஆக்கிரமித்து வருவதாக விக்னேஸ்வரன் குற்றம் சுமத்துகிறார். எனினும் இராணுவ ஆக்கிரமிப்பு நிலங்களில் 90 சதவீதம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அவர் கேட்பது பலாலியில் வானூர்தி தரையிறங்கும் பாதை. அந்த பாதையில் மறைந்திருந்த பயங்கரவாதிகளால் இரண்டு வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
எனவே அவை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும். இதன்காரணமாக அவற்றை இராணுவம் மீள ஒப்படைக்காது என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்