விமானத்திலிருந்து இலங்கையரை இறக்கி விட்டு வந்த ஊழியர்கள்!?
10 Sep,2020
சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வரத் தயாராக இருந்த விமானத்தில் இலங்கை பயணி ஒருவரை இறக்கிவிட்டு வந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சவூதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கையர் ஒருவர் நாடு வர தயாராகி உள்ளார்.
இதன்போது தன்னுடைய இருக்கைக்கு பதிலாக வேறு ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார்.
இதனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதனால் குறித்த நபரை இறக்கிவிட்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் குறித்த விமானம் ஏனைய பயணிகளுடன் நாட்டை வந்தடைந்ததாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.