மரண தண்டனை கைதி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிக்கவும் முடியாது – சட்டமா அதிபர்
31 Aug,2020
டனைக் விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினார் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் முடியாது என்றும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய அழைத்து வருமாறு சபாநாயகரினால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வது குறித்தும் வாக்களிப்புக்களில் பங்குபற்றுவது குறித்தும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சினால் கோரப்பட்டிருந்த ஆலோசனைக்கு அமைவாகவே சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.
அத்தோடு அரசியலமைப்பின் படி மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபரின் தண்டனை ரத்து செய்யப்படாது என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரமேலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் கடந்த ஜூலை 31 ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஏனைய இருவரும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் நிலந்த ஜயகொடி என்பது குறிப்பிடத்தக்கது.