ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக பதில் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு
31 Aug,2020
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 03 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரியில் உயர் அதிகாரமுள்ள ஜனாதிபதி அணைக்குழுக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார்.
கடந்த ஆட்சியின் போது அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதித்துறை மற்றும் பொலிஸ் மீது தலையீடு குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.