யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு! பொலிஸ் - கடற்படையினர் குவிப்பு
20 Aug,2020
யாழ். மாதகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நில அளவைத் தினைக்களத்தினர் இன்று வருகை தந்த போது அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை நில அளவைத் திணைக்களத்தினர் கடற்படையினருக்கு அளப்பதற்கு இன்று வருகை தந்திருந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நில அளவைப் பணியை கைவிட்டு விட்டு திரும்பி சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
குறித்த போராட்டத்தின் போது ஏராளமான பொலிஸாரும் கடற்படையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.