ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்!
17 Aug,2020
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினூடாக உள்ளூர் மரக்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான சிறப்பு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய பொதுமுகாமையாளர் உபுல் கலன்சூரிய இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது, “உள்ளூர் மரக்கறி மற்றும் பழங்கள் அடங்கிய முதல் விமானம் இன்று காலை மத்தள விமான நிலையத்திலிருந்து ஓமான் மஸ்கட் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.
அதாவது, இலங்கையில் பயிரிடப்பட்ட 3,371 கிலோ மரக்கறிகள் மற்றும் பழங்களை சலாம் ஏயர்வேஸின் ஓ.வி – 1432 என்ற விமானத்தின் ஊடாக மத்தள விமான நிலையத்திலிருந்து ஓமானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சலாம் ஏயர்வேஸின் ஓ.வி – 1432 என்ற குறித்த விமானம், 150 பயணிகளுடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தை நேற்று வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.