பிரான்ஸிலிருந்து இன்று கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற இலங்கையர்கள்!
09 Aug,2020
பரிஸில் இருந்து இலங்கையர்களை ஏற்றிய விசேட விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய இன்றையதினம் மாத்திரம் 446 இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
டுபாயிலிருந்து 422 இலங்கையர்களை எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த விமானம் இன்று மாலை 4.30 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
மேலும் சிங்கப்பூரில் தங்கியிருந்த 16 பேரும் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் இன்று பிற்பகல் 12.55 மணியளவில் பிரான்ஸின் பரிஸ் நகரில் இருந்து 8 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.