சுப்பிரமணியன் சுவாமிறைஅழைத்த மஹிந்த, மிக கவலையில் சுப்பிரமணியன் சுவாமி ?
09 Aug,2020
இலங்கையின் நான்காவது பிரதமராக பதவியேற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தனக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்ததாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் போக்குவரத்து நடைமுறைகள் காரணமாக அவரின் அழைப்பை ஏற்று செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது ருவிட்டரில் பக்கத்தில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தொலைபேசி அழைப்பு வந்துள்ளமை குறித்து தான் மகிழ்ச்சியடைந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.