நாடாளுமன்றம் செல்லும் 3 தந்தை மகன் ஜோடிகள்!
08 Aug,2020
நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தந்தையரும் அவர்களின் மூன்று மகன்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தந்தையரும் அவர்களின் மூன்று மகன்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து அவரது மகன் நாமல் ராஜபக்சவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச அம்பாந்தோட்டையில் இருந்தும், அவரது மகன் சஷிந்திர ராஜபக்ஷ மொனராகலவில் இருந்தும் தெரிவாகியுளனர்.
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனும், அவரது மகன் பிரமித தென்னக்கோனும், மாத்தளையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மொட்டு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களாவர்.