கொழும்பிலிருந்து சென்ற பேருந்துக்குள் அமெரிக்கர் உயிரிழப்பு
26 Jul,2020
இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க பிரஜை ஒருவர் பேருந்திற்குள் உயிரிழந்துள்ளார்.
பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்துக்குள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து நேற்று கண்டி நோக்கி சென்ற பேருந்தில் இந்த அமெரிக்க பிரஜை உயிரிழந்துள்ளார்.
யக்கலை பிரதேசத்தில் பேருந்தில் ஏறிய இந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கண்டிக்கு அருகில் செல்லும் போது மயக்கமுற்று இருந்ததால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் இறந்து விட்டதாக வைத்தியசாலையில் கடமையில் இருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.