பொதுத் தேர்தலுக்குப் பின் இராணுவ ஆட்சி!
22 Jul,2020
பொதுத் தேர்தலின் பின் அரசாங்கம் இராணுவ ஆட்சியை ஸ்தாபித்து, நாட்டு மக்களுக்கு சுதந்திரமாக சுவாசிக்கக் கூட சந்தர்ப்பம் அளிக்காத நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நாட்டை மாத்திரமின்றி தங்களை பாதுகாப்பார்கள் என்று கருதியே 69 இலட்சம் பேர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுத்திருந்தனர்.
தேர்தல் காலத்தில் ராஜபக்ஷாக்களின் பிரசார செயற்பாடு களுக்குக் காசு இல்லாததன் காரணமாக யாரிடமாவது முற்பணம் பெற்றுக் கொண்டதன் காரணமாகவா அரச மண்டபம் உடைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.இந்த பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் பிரதமரால் பதிலளிக்க முடியாவிட்டால், கலாச்சார அமைச்சிலிருந்து அவர் விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்