2001 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று!
25 Jun,2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,001 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பிற்பகல் 7.15 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,998 இலிருந்து 2,001 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலிருந்து வந்த 07 பேர் மற்றும் 03 கடற்படையினர் உள்ளிட்ட 10 பேரே நேற்று அடையாளம் காணப்பட்டவர்களாவர்.