அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாடு திரும்பினார்
23 Jun,2020
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமாக விஷேட விமானம் ஒன்றின் மூலம் இன்று அதிகாலை 4.47 மணியளவில் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாத காரணத்தினால் அவர்கள் டுபாய் வந்து அங்கிருந்து விஷேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.