ஸ்ரீலங்காவில்கோழி இறைச்சிப் பிரியர்களுக்கு சோகமான செய்தி
21 Jun,2020
எதிர்வரும் வாரங்களில் கோழி இறைச்சி உற்பத்தி வீழ்ச்சியடையும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக கோழிகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோழி இறைச்சி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சோள உற்பத்தி குறைவடைந்துள்ளமையினால் கோழிகளுக்கான உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சோளம் இல்லாத காரணத்தினால் ஸ்ரீலங்காவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோசா உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.