இலங்கையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர்
11 Jun,2020
இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் உயிரிழந்துள்ளார்.
மிரிஹான பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 53 வயதுடைய சுனில் ஜயவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.