ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 17 ஆயிரம் டொலர் கொடுத்த இலங்கை!
07 Jun,2020
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு, 2019ஆம் ஆண்டில் இலங்கை, 17 ஆயிரம் அமெரிக்க டொலரை பங்களிப்பாக வழங்கியுள்ளது.ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்டுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை ஒன்றிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு நிதிப் பங்களிப்பு செய்த நாடுகளின் வரிசையில், இலங்கை 68 ஆவது இடத்தில் உள்ளது. மேலும், 15 ஆயிரம் அமெரிக்க டொலரை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு பங்களிப்பாக வழங்கிய, சிங்கப்பூர் 69 ஆவது இடத்தில் உள்ள நிலையில், அதற்கு ஒரு இடம் முன்பாக இலங்கை இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.