வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 505 பேருக்கு கொரோனா!
31 May,2020
வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 505 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இவ்வாறு தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1620 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது, தொற்றுக்குள்ளான 829 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படையினர் 25 பேர், மாலைதீவிலிருந்து வந்த 03 பேர், குவைத்திலிருந்து வந்த 08 பேர், கட்டாரிலிருந்து வந்த 19 பேர் உள்ளடங்குவதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.