எனது கொள்கைகளை பின்பற்றுங்கள் அல்லது உங்களால் முடியாது என தெரிவித்துவிட்டு பதவிவிலகுங்கள்:
16 May,2020
எனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துங்கள் அல்லது பதவிகளில் இருந்து விலகுங்கள் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரச அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.
வியாழக்கிழமை அரச அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் தனது கொள்கைகளை பின்பற்றவேண்டும் அல்லது பதவி விலகவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளிற்கு தனது கொள்கை என்னவென்பது தெரிந்திருக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உங்களிற்கு எனது கொள்கைகள் என்னவென்பது தெரியும்,நீங்கள் அதற்கேற்ப செயற்படவேண்டும் அல்லது உங்களால் முடியாது என தெரிவித்துவிட்டு விலகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் இதனையே தெரிவிக்க விரும்புகின்றேன் என கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒரு கொள்கையொன்றை முன்னெடுக்கும்போது அனைத்து அரசதிணைக்களங்களும் அதனை முன்னெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஒருவர் செயலாளரா அல்லத திணைக்களத்தின் தலைவரா என்பது பற்றி எனக்கு கவலையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.நான் விடயங்களை சரியான வழியில் செய்கின்றேன்,சரியான கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அரசஅதிகாரிகள் இருப்பதில் அர்த்தமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.