சஹ்ரானின் பயிற்சிக்கூடமாக இயங்கிய விடுதி காத்தான்குடியில் சுற்றிவளைப்பு- தேடுதல் தீவிரம்
08 May,2020
மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள கர்பலா பிரதேச கடற்கரை ஓரத்தில் உள்ள விடுதியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான், தனது உறுப்பினர்களுக்கு பயிற்சியளித்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காத்தான்குடி பொலிஸார் மற்றும் கொழும்பில் இருந்து வருகைதந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த விடுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்ற வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.