இலங்கையில் 7 வயது சிறுவனையும் விட்டு வைக்காத கொரோனா
07 May,2020
இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 29 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நோயாளிகளில் 24 பேர் கடற்படை சிப்பாய்கள் என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய நோயாளிகள் 5 பேரில் ஒருவர் யாழ்ப்பாணம், பலாலி பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நால்வர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி பழகியவர்கள் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.அந்த நால்வருக்குள் 7 வயது சிறுவனும் உள்ளடங்குவதாக சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.