இலங்கையில் ஏப்ரல் மாதம் 27முழுமையாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்!
25 Apr,2020
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் அலவத்துகொடைபொலிஸ் பிரிவு , கேகாலை மாவட்டம் வரக்காபொல பொலிஸ் பிரிவு மற்றும் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று பொலிஸ் பிரிவு ஆகியவற்றுக்கு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை காலை ஐந்து மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் நேற்று இரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் பொலிஸ் ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பிலான எந்த அறிவித்தலும் தங்களுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.