இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்கவில்லை : இலங்கை திட்டவட்டம்
25 Apr,2020
கொரோனா வைரஸ் பரவலை கையாள அண்டை நாடுகளான இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பூடானுக்கு உதவ இந்திய ராணுவம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் நிருபர்களிடம் பேசிய இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் கமல் குணரத்னே, “இலங்கையில் கொரோனா வைரசை எதிர்த்து போராட இந்திய ராணுவத்திடம் உதவி எதுவும் கேட்கவில்லை என்றும், இது தொடர்பாக இரு தரப்பிலும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும் கூறினார்.
மேலும் கொரோனா வைரசின் அனைத்து சவால்களையும் சமாளிக்க இலங்கை ராணுவம் தயாராக இருக்கிறது என்றும் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில், இலங்கை வீரர்கள் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். எனவே இந்தியா மட்டுமின்றி வேறு எந்த வெளிநாட்டு ராணுவமும் இலங்கைக்கு உதவ வேண்டிய அவசியம் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.