மீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் ஊரடங்குச் சட்டம்! ஜனாதிபதி செயலகம் தகவல்
22 Apr,2020
மீண்டும் கொரோனா பரவும் பேராபத்து! உலக நாடுகள் அனைத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச்சட்டமானது 27 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளை தவர்ந்த பகுதிகளில் அதிகாலை 05 மணி தொடக்கம் இரவு எட்டு மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வௌியேறவும் அனைவருக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.