இலங்கையில் 7 புதிய கொரோனா நோயாளிகள்
13 Apr,2020
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 210ஆக அதிகரித்துள்ளது.
நேற்று இரவு மேலும் 7 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், கொரோனா தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட விமான நிலைய துப்பறவு பணியாளருடன் நெருக்கமாக இருந்தவர், ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதி, ஜாஎல சுதுவெல்ல பிரதேச நபர், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிநலையத்தில் அடையாளம் காணப்பட்ட மூவர் மற்றும் பூனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் நபர்கள் இருவர் ஆகியோரே நேற்று இரவு இவ்வாறு நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நபர்களுக்குள் இரண்டு பெண்களும் 5 ஆண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.