குளிரூட்டப்பட்ட அறைகளால் ஆபத்து! இலங்கை வைத்தியர் எச்சரிக்கை
13 Apr,2020
கொரோனா வைரஸ்கள் குளிரூட்டப்பட்ட இடங்களில் மிகவும் எளிதாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதென உடலியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு இயற்கை காற்றோட்டம் கிடைப்பதில்லை. எனவே இற்பு காற்றில் குவிக்கக்கூடிய கிருமிகளின் அளவு மிக அதிகம்.
இந்த ஆபத்தான நாட்கள் செயற்கையான இடஅமைப்புக்களை விட இயற்கை காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி கிடைக்கும் இடங்களே பாதுகாப்பானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
குளிரூட்டப்பட்ட அங்காடிகள் அல்லது வேறு இடங்களில் அதிக நேரம் செலவிடுவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற இடங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்