18 ஆயிரம் பேர் இதுவரை கைது – பொலிஸார்
08 Apr,2020
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 18 000 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 4,667 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (08) நண்பகல் 12மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் கடந்த 19 நாட்களில் 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.