தென்னிலங்கையில் திடீரென உருவாகிய இராட்சத கடல் அலை!
08 Apr,2020
களுத்துறை கடலில் நேற்று மாலை உருவான பாரிய அலை காரணமாக சுமார் 28 சுற்றுலா விருந்தகங்களும் குடியிருப்புகளும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணிளயவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் நீரினால் நிரம்பி காணப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு இருந்ததை காணக்கூடியதாக உள்ளது.
இந்த வருடத்துக்குள் இந்த சம்பவம் இரண்டாவது முறையாக ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் மேலும் அலையினால் சேதங்கள் ஏற்படுவதை தடுக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.