ஸ்ரீலங்காவில் தொடரும் கைதுகள்! இதுவரை 7358 பேர் கைது
31 Mar,2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7,358 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.
அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.
உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதேவேனை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை. இதனால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீலங்காவில் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 20ம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான காலப்பகுதிக்குள் 7,358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் என 1,768 வாகனங்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.