தற்போதைய நிலையை கையாள போதிய நிதியுள்ளது – திறைசேரி!
27 Mar,2020
நாட்டின் தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் செலவுகளுக்கு போதுமான நிதி கையிருப்பிலுள்ளதாக திறைசேரி தெரிவித்துள்ளது.
திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு , சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான நிதியை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்தியவசிய பொருட்களை மக்களுக்களின் வீடுகளுக்கு சென்று விநியோகிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.