இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைப்பு!
02 Mar,2020
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியிடப்படும்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய, நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
2015 ஓகஸ்ட் 16ஆம் திகதி நடந்த பொதுத் தேர்தலை அடுத்து, 2015 செப்ரெம்பர் 1ஆம் திகதி தற்போதைய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இடம்பெற்றிருந்தது. இதற்கமைய இன்றுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதால், ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிடவுள்ளார்.