அரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுகின்றது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு!
27 Feb,2020
'
இந்த அரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தற்போதைய அரசாங்கம் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.
மைத்திரிபால சிறிசேனவை போன்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக மாறியிருந்தாலும் கொள்கைகள் அப்படியே இருப்பதாகவும் பொருளாதாரத்தில் சிறப்பான மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த அரசாங்கம் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் ஆனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கவில்லை என்றும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்று தற்போது 100 நாட்கள் கடந்துள்ள நிலையில்,கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அதன் இயலாமையை மக்களுக்கு காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.