சகோதரனின் கழுத்தை வெட்டிக் கொன்ற தம்பி கைது: இரத்தினபுரியில் சம்பவம்
27 Feb,2020
இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸ் பிரிவின் அப்புகஸ்தென்ன கீழ் அமுனுதென்ன தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அவரது சகோதரனால் கத்தியால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வேல்வத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (25) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 48 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தினம் இரவு 8.00 மணியளவில் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பாக மாறியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த தம்பி, தனது மூத்த சகோதரனின் கழுத்தை வெட்டியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் வேவல்வத்தை பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.