மஹிந்தவின் தம்பியிடம் கண்ணீர் விட்டு கதறி மன்னிப்புக்கேட்ட ரிஷாட்; உடனே ரிஃகான் விடுதலை!
18 Feb,2020
சுமார் ஒரு மணிநேரம் முன்னாள் அமைச்சரும் மஹிந்தவின் சகோதரருமான பசில் ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னாள் அமைச்சரும் பல வருடங்களாக சில தமிழ் மக்களை பேயனாக்கி வந்துகொண்டிருப்பவருமான ரிஷாட் பதியுதீன் கண்ணீர்விட்டு அழுதுள்ளதாக றிஷாட்டின் சகா ஒருவர் அதிர்வு இணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரத்திற்குமுன் றிஷாட்டின் சகோதரர் ரிஃகான் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தார், அவரை தொடர்ந்து ரிஷாட் பதியுதீனை மோசடி வழக்கில் கைது செய்து அண்ணன் மற்றும் தம்பியை உள்ளே தள்ளி கழி தின்ன வைப்பதுதான் மஹிந்தவின் பிளானாக இருந்தது, அதுதான் சிங்கள மற்றும் தமிழ் மக்களின் விருப்பமாகவும் இருந்தது, ஏனென்றால் அவர்கள் அவ்வளவு மோசடிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது உண்மை.
இதனை அறிந்துகொண்ட ரிஷாட் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் ஒரேஒருவர் பசில் அவர்கள், உடனே பசில் அவர்களுக்கு போன் எடுத்து என்னை மன்னித்திடுங்கள், மஹிந்த ஐயாவிடம் நான் மன்னிப்பு கேட்டதாக சொல்லுங்கள், என்னையும் கைது செய்யாதீர்கள், என்ன தம்பியை விட்டுவிடுங்கள், எனக்கு அமைச்சுப்பதவியும் இல்லை மேலும் எங்களை கைது செய்தால் எங்களை மக்கள் மதிக்கவும் மாட்டார்கள், வாக்களிக்கவும் மாட்டார்கள், நான் வெற்றிபெறுவது இன்னும் கடினமாகிவிடும், என்ற அரசியல் வாழ்க்கையே முடிந்து விடும், தயவு செய்து பசில் sir உங்களுக்கு நான் என்னவேண்டுமென்றாலும் செய்கிறேன், எங்களை விட்டுவிடுங்கள், மன்னித்து விடுங்கள் என தொலைபேசி மூலம் ஒரு மணித்தியாலம் அழுதுகொண்டே சொல்லியிருக்கிறார் ரிஷாட்.
இதனையடுத்து பசில் தன்னுடைய சகோதரர்களான மஹிந்த, ஜனாதிபதி கோட்டாவிடம் கலந்து பேசி, வரும் நாடாளுமன்ற தேர்தலையடுத்து பிரதமராவதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவைப்படலாம் எனவே இப்போதைக்கு றிஷாட்டை கொஞ்சம் விட்டு வைப்போம் என முடிவெடுத்து இன்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.