விநாயகமூர்த்தி முரளிதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டாயிரம் வாக்குகளையாவது எடுத்துக்காட்டமுடியுமா:கோடீஸ்வரன்
30 Jan,2020
தமிழீழ விடுதலைப்புலிகளால் தேடப்பட்டு வந்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டாயிரம் வாக்குகளையாவது பெற்றுக்காட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
பெரும்பான்மை அரசியல்வாதிகளின் கைக் கூலியாக செயற்படும் கருணா மட்டக்களப்பு மக்களின் மனங்களை வெல்ல முடியாத நிலையில், தற்போது, அம்பாறை மாவட்டத்தில் வங்குரோத்து அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.