சம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது!
23 Jan,2020
சம்மாந்துறையில் அதிகளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வீடொன்றில் இருந்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி, 64 துப்பாக்கி ரவைகள், வெடிமருந்துகள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பொலிஸார் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.