யுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் – பிரதமர் மஹிந்த
18 Jan,2020
யுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகள் அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது. வான்படையினை தன்வசம் கொண்டிருந்த முதலாவது தீவிரவாத அமைப்பாக விடுதலை புலிகள் அமைப்பு பெயர் பெற்றுள்ளது.
இவ்வாறான பலம் கொண்ட பயங்கரவாத அமைப்பினை குறுகிய காலத்திற்குள் நிறைவிற்கு கொண்டு வந்து முப்படையின் பெருமையினையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
திருகோணமலை சீன துறைமுகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விமானப்படை தெரிவிற்கான பயிற்சியை நிறைவு செய்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு சின்னம் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முடிவிற்கு கொண்டு வர முடியாது என்று கருதப்பட்ட பயங்கரவாத சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த பெருமை முப்படையினரையே சாரும். விமான படையின் பங்களிப்பு இதில் பிரதானமானது. இராணுவத்தினர் புலிகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை தாக்க முன்னர் விமானப்படையினரே வான் மூல தாக்குதலை மேற்கொண்டு இராணுவத்தினருக்கு பாரிய ஒத்துழைப்பினை வழங்கினார்கள். இராணுவத்தினரது செயற்பாடுகளுக்கு வமானப்பட்டையின் பங்களிப்பு இன்றியமையாதது.
வன்னி பிரதேசத்தில் விடுதலை புலிகள் பதுங்கு குழிகளின் ஊடாக தாக்குதலை மேற்கொண் ட போது அது இராணுவத்தினருக்கு பாரிய தடையாக காணப்பட்டன.
அந்த வேளையில் விமான படையினரே மறைந்திருந்து தாக்கும் புலிகள் தொடர்பில் இராணுவத்தினருக்கு தொடர்ந்து தகவல்களை வழங்கினார்கள்.
வான்வளியில் ஊடாக செயற்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் விமானப்படையினர் சிறப்பாக முன்னெடுத்தமையினால் குறுகிய காலத்தில் பயங்கரவாத சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர முடிந்தது.
உலகில் தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய விமான படைகளில் இலங்கை விமான படைக்கு அதிகளவான அனுபவங்கள் உண்டு என்பதை அறிவேன்.
உலகில் தீவிரவாத அமைப்புக்கள் ஏதும் விமானப்படை வசதியினை கொண்டிருக்கவில்லை. ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் நிலப்பரப்பினை கைப்பற்றியிருந்த ஐ.எஸ்.ஐ. எஸ். தீவிரவாத அமைப்புக்கு கூட விமான படை வசதி காணப்படவில்லை.
ஆனால் விடுதலை புலிகள் அமைப்பிற்கு இந்த விமான படை வசதி காணப்பட்டன. விடுதலை புலிகள் வான்படை தாக்குதலின் ஊடான உலக தீவிரவாத அமைப்புக்களுக்கு புதிய மார்க்கத்தை காண்பித்தார்கள்.
அக்காலக்கட்டத்தில் தாக்குதல் இயந்திரங்களை எம்மவர்கள் குறுப்பெட்டி என்று புனைப்பெயர்கொண்டு அழைப்பாரகள்.
ஆனால் இதனை பயன்படுத்தியே விடுதலை புலிகள் கொலன்னாவ எண்ணெய் களஞ்சியம், கெரவலபிடிய எண்ணெய் தாங்கி கள், கடுநாயக்க விமான நிலையம் ஆகியவற்றில் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இத்தாக்குதல்கள் அவர்கள் எதிர்பார்த்ததை போன்நு று பாரிள விளைவுகளை ஏற்படுத்திவிலலை. இத்தாக்குதல் முறையாக இடம் பெற்றிருந்தால் பாரிய விளைவுகளை எதிர்க் கொள்ள நேரிட்டிருக்கும்.
தற்கொலை குண்டுதாரிகள், தற்கொலை தாக்குதல்கள் ஆகிய தாக்குதல் முறைகளை விடுதலை புலிகளே உலகிற்கு அறிமுகம் செய்தார்கள்.
புதிய பல விடயங்களை விடுதலை புலிகள் அறிமுகம் செய்தமையினாலே 2008 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பினை அமெரிக்காவின் எப். பி. ஐ. பயங்கரவாத அமைப்பாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. இவ்வாறான பலம் கொண்ட அமைப்பினை இல்லாதொழித்தமை இலங்கையின் முப்படையின் கௌரவத்தை உலகிற்கே இன்று பறைசாற்றியுள்ளது.
30 வருட கால யுத்த பின்னணியை கொண்ட விடுதலை புலிகளுடன் 1980ம் ஆண்டே வான்வெளி தாக்குதலை விமான படை மேற்கொண்டது.இக்காலக்கட்டத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் வரையில் இராணுவத்திற்கு விமானப் படை பாரிய ஒத்துழைப்பினை வழங்கியுள்ளது. பலம் கொண்டு விடுதலை புலிகள் தாக்கும் போது முப்படையினரும் ஒன்றினைந்து நாட்டுக்காக செயற்பட்டமையினால் பயங்கரவாத அமைப்பினை முழுமையாக இல்லாதொழிக்க முடிந்துள்ளது.
தாய் நாட்டிற்காக உயிர் நீத்த முப்படையினரும் அரசியலுக்கு அப்பாற் கௌரவிக்கப்பட வேண்டும். யுத்த காலத்தில் முப்படையினர் ஆற்றிய சேவையினை இன்றும் தொடர்கின்றார்கள்.
இயற்கை அனர்த்தத்தின் போது தங்களின் உயிரை தியாகம் செய்தும் பொது மக்களை முப்படையினர் பாதுகாத்துள்ளார்கள்.
வெள்ள அனர்த்ததின் போது வமான படையினர் ஆற்றும் சேவை இன்றியமையாதது.நாட்டின் எல்லை பாதுகாப்பிற்கும் ஒரு பகுதி ஒத்திழைப்பினை வான்படை வழங்குகின்றது. முப்படையில் சேவையாற்றும் வீரர்கள் நாட்டுக்காகவும், படைகளின் இலக்குக்காகவும், செயற்பட வேண்டும். விமான படையின் சேவை அளப்பரியது என்றார்.