கோட்டாபய அடுத்த மாதம் சீனா பயணம்
17 Jan,2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது இரண்டாவது உத்தியோகபுர்வ வெளிநாட்டு விஜயத்தை அடுத்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி இந்த மாதம் சீனாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தும் கூட, சீனாவின் வேண்டுகோளின் பேரில் அதற்குரிய தினம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவைச் சந்தித்த சீன வெளிவிவகார அமைச்சர் வெங் யீ ஜனாதிபதிக்கு சீனாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது